உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதிகளில் குட்டியுடன் உலா வரும் கரடி

Published On 2022-06-24 09:23 GMT   |   Update On 2022-06-24 09:23 GMT
  • பூங்காவில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
  • கடந்த சில தினங்களாகவே இந்த பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

அரவேணு:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னிகா தேவி காலனி பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான வள மீட்பு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இந்த வளம் மீட்பு பூங்காவில் கரடி ஒன்று குட்டிகளுடன் உலா வந்தது. இதை அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் கண்டு அதிர்ச்சியாகினர். உடனே பாதுகாப்பான இடத்தில் அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

தொடர்ந்து குடியிருப்புக்குள் புகுந்தது. வெகு நேரமாக குடியிருப்பு மற்றும் வளமீட்பு பூங்காவிலேயே கரடி சுற்றி திரிந்தது.இதன் காரணமாக பொது–மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில தினங்களாகவே இந்த பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக வளம் மீட்பு பூங்காவுக்கு அடிக்கடி கரடி வருகிறது. இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை.

மேலும் தனியாக வெளியில் செல்லவும், அத்தியாவசிய தேவை–களுக்கு கூட வெளியில் வர முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகி–றோம். எனவே குடியி–ருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என வனத்து–றையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News