உள்ளூர் செய்திகள்
பீச் வாலிபால் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு
- மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியை நாகப்பட்டினத்தில் நடத்தின.
- இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 156 அணிகள் பங்கேற்றன.
சேலம்:
தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் மற்றும் நாகப்பட்டினம் கைப்பந்து கழகமும் இணைந்து மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டியை நாகப்பட்டினத்தில் நடத்தின. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 156 அணிகள் பங்கேற்றன. போட்டியில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரஞ்சனி, யாமினி ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
இந்த மாணவிகள் நேற்று சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமாரை சந்தித்து பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத் தலைவர்கள் அகிலாதேவி, ராஜாராம், தொழில் அதிபர் விஜயராஜ் மற்றும் பயிற்சியாளர் பரமசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.