உள்ளூர் செய்திகள்

ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

பழனி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள்

Published On 2023-07-12 05:42 GMT   |   Update On 2023-07-12 05:42 GMT
  • முதற்கட்டமாக, வாங்கப்பட்ட 4 பேட்டரி குப்பை வாகனங்களை நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
  • நகராட்சி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்களுக்கு நகராட்சி தலைவர், ஆணையாளர், துணைத் தலைவர் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

பழனி:

பழனி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பையை, வீடு வீடாக சென்று தூய்மைப் பணியாளர்கள் பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க வசதியாக பேட்டரியால் இயங்கும் குப்பை வாகனங்கள் வாங்க திட்டமிட்டனர். முதற்கட்டமாக, வாங்கப்பட்ட 4 பேட்டரி குப்பை வாகனங்களை நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

மேலும் நகராட்சி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்களுக்கு நகராட்சி தலைவர், ஆணையாளர் ராமர், துணைத் தலைவர் கந்தசாமி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மக்களுக்கான தூய்மை இயக்கம் சார்பில் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. நகர் நல அலுவலர் மனோஜ்குமார், பொறியாளர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News