உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேவதானப்பட்டியில் அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் கிராம மக்கள்

Published On 2022-06-21 05:41 GMT   |   Update On 2022-06-21 05:41 GMT
  • தேவதானப்பட்டி தில்லையடி வல்லியம்மை நகரில் 1500 குடும்பங்கள் வாழ்நது வருகின்றனர்.
  • குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றித்தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி தில்லையடி வல்லியம்மை நகரில் 1500 குடும்பங்கள், விவசாய தினக்கூலி வேலை தொழிலாளர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

புல்லக்காபட்டி, தில்லையடி வல்லியம்மை நகர், பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து 25 ஆண்டு காலமாக அடிப்படை தேவைகளான சாலை வசதி செய்து தராததால் சிறு மழை பெய்தால் கூட மழை வெள்ளம் தேங்கி குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.

இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்றும் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்தை குற்றம்சாட்டி வருகின்றனர். பொதுமக்கள் தொடர்ந்து பலமுறை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்கள் நிலை இதேதான் என்றும் தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதியில் என்ன பணிகள் நடைபெறுகிறது என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் திறந்து விடுவதாகவும் அதுவும் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாவும் தெரிவிக்கின்றனர். எனவே குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து நிைறவேற்றித்தர அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News