- பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- இரவு பெற்றோரிடம் பேசிவிட்டு மற்றொரு வீட்டில் தனியாக உறங்கச் சென்று விட்டார்.
உடுமலை :
உடுமலையை அடுத்த பெரிய வாளவாடியை சேர்ந்தவர் நாகராஜ்.இவரது மகன் மோகன்ராஜ்(வயது 38).இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மோகன்ராஜ் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மோகன்ராஜ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோரை பார்ப்பதற்காக திருப்பூரில் இருந்து சொந்த ஊரான பெரியவாளவாடிக்கு வந்துள்ளார்.
நேற்று முன் தினம் இரவு பெற்றோரிடம் பேசிவிட்டு மற்றொரு வீட்டில் தனியாக உறங்கச் சென்று விட்டார். காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டின் கதவை திறந்து பார்த்து உள்ளனர். அப்போது மோகன்ராஜ் இறந்த நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து தளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.