உள்ளூர் செய்திகள்
பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட்டில் வாழைத்தாரின் விலை 2 மடங்கு உயர்வு
- கடந்த வாரம் வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
- விலை அதிகரிப்பால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் வாழைத்தார், வாழை இலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் வரை 200 இலைகள் அடங்கிய வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது அவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்து ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கோழிக்கூடு, நாடு, மட்டி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த வாழைத்தார்கள் விலையும் 2 மடங்காக அதிகரித்துள்ளது.
வாழைத்தார் மற்றும் வாழை இலைகளின் விலை அதிகரிப்பால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தற்போது காற்று சீசன் தொடங்கி உள்ளதால் வாழைத்தார் மற்றும் வாழை இலை களின் விலையானது அதிகரித்து ள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.