உள்ளூர் செய்திகள்

சாயர்புரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. பரிசு வழங்கினார்.

சாயர்புரத்தில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி - 500 பேர் பங்கேற்பு

Published On 2023-08-21 08:42 GMT   |   Update On 2023-08-21 08:42 GMT
  • பெண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை காட்டுநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனகலட்சுமி, சங்கீதா, மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர்.
  • போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

சாயர்புரம்:

சாயர்புரத்தில் தூத்துக்குடி ஈ.சி. பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது. ஆர்.எஸ். புரத்தில் தொடங்கி சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்த போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியினை சரவணராஜா, ராம்குமார் ஆகியோர் கொடியசைக்து தொடங்கி வைத்தனர். பெண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை காட்டுநாயக்கன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கனகலட்சுமி, சங்கீதா, மகாலட்சுமி ஆகியோர் பிடித்தனர். ஆண்களுக்கான பிரிவில் முதல் 3 இடங்களை பசுபதி, அஜித்குமார் மற்றும் பார்வதிநாதன் ஆகியோர் பிடித்தனர்.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கி பேசினார். முதல் 3 இடங்களை பிடித்த வர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

முன்னதாக ஈ.சி. பிட்னஸ் பயிற்சியாளர் இம்மானுவேல் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தி னர்களாக தொழிலதிபர்கள் பரமேஸ்வரன், ஜெபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் செயல் விளக்க காட்சிகளாக போதை இல்லாத வாழ்க்கை வாழ்ந்தால் உடல் வலிமை யுடனும், மன வலிமையுடனும் வாழலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர்.

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ், ட்ராவல் பேக் மற்றும் டி-ஷர்ட் வழங்கப்பட்டது. முடிவில் ஜெபதிலகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News