தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா குறித்து விழிப்புணர்வு பேரணி
- பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பாபு தொடங்கி வைத்தார்.
- மஞ்சப்பை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா குறித்த விழிப்பு ணர்வு பேரணி நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா நடை பெறுவதை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் பாபு தொடங்கி வைத்து கூறிய தாவது: தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா 5ம் தேதி முதல் 12ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.
புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. பேரணியை தொடர்ந்து மஞ்சப்பை குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது, என்றார்.
இந்நிகழ்வில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மகாலிங் கமூர்த்தி, மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் வெங்க டேஷ், விளையாட்டு அலு வலர் மகேஷ்குமார், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, வட்டாட்சியர் விஜயகுமார், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.