உள்ளூர் செய்திகள்

ஓசூரில் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-01-26 13:38 IST   |   Update On 2023-01-26 13:38:00 IST
  • ஊர்வலத்தை ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் மாணவ,மாணவியர்கள் சென்றனர்.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள ஆர்.வி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த ஊர்வலத்தை ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில்,அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பேரணியில், வாக்காளர்களின் கடமை மற்றும் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாக, வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் மாணவ,மாணவியர்கள் சென்றனர்.

இந்த பேரணி மாநகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவில், ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பின்னர், அங்கு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துப்பாண்டி, ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் அலுவலர்கள், வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் அனைவரும் கையொப்பமிட்டனர்.

Tags:    

Similar News