உள்ளூர் செய்திகள்
சூளகிரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- வனச்சரக அலுவலர் ரவி முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- கிராமிய கலைக்குழு மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டனாவில் ஒசூர் வன உயிரின காப்பகம் சார்பில் காப்பாளர் செல்வி கார்த்திகாயிணி அறிவுரைப்படி வன உதவி பாதுகாவலர் ராஜமாரியப்பண் தலைமையில் வனச்சரக அலுவலர் ரவி முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஒசூர் வனக்கோட்டம் சார்பில் கள்ள துப்பாக்கி ஒழிப்பது குறித்தும்,திருட்டு மின்சாரம் எடுத்து வனவிலங்குகளை வேட்டையாடுவது குறித்தும், வனத்தில் தீ வைப்பதால் ஏற்படும் தீங்குகளை குறித்தும் கிராமிய கலைக்குழு மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.