உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் பழைய டயர்களை அகற்றி டெங்கு ஒழிப்பு பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்ட காட்சி.

டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு

Published On 2023-09-23 10:25 GMT   |   Update On 2023-09-23 10:25 GMT
  • சுகாதாரப் பணியாளர்கள் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
  • பொது சுகாதார சட்டம் விதிமுறைகளின் படி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை பேரூ ராட்சியில், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் தலை மையில், வட்டார சுகா தார மேற்பார்வையாளர் லட்சுமிபதி, மருத்துவ மேற்பார்வையாளர் ஸ்ரீதர், சுகா தார மேற்பார்வையாளர் சிவ குருநாதன், கார்த்திக், சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சக்திவேல், இளங்கோ, நந்தகுமார், துப்புரவு ஆய்வாளர் நடே சன் ஆகியோர் கொண்ட குழுவினர் 18 வார்டுகளில் டெங்கு தடுப்பு பணிகள் மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.

டெங்கு கொசுபுழு பரவும் இடங்களை ஆய்வு செய்து, பேரூராட்சி வாகனம் மூலம் பழைய டயர்கள் அகற்றி கொசுப் புழு பரவல் தன்மை கொண்ட இடங்க ளை வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் விதிமுறைகளின் படி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் கொசுப்புழு பணியாளர்களுக்கு கொசுப்புழு கட்டுப்படுத்தும் முறை, மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்கும் பணியா ளர்களுக்கு குளோரினேசன் செய்யும் முறை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

Similar News