அரூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
அரூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்
- அரூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
- கணக்கெடுப்பிற்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்
அரூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கை பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் வழங்கினார்.துணை தலைவர் சூர்யாதன பால் பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் முல்லை ரவி ஆகியோர் உடனிருந்தார்.
பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் தங்களது வீடுகளுக்கு கணக்கெடுப்பு பணிகளுக்கு வரும் போது வீட்டின் உரிமையாளர்கள் கழிவு சேகரிப்பு, தொட்டியை சுத்தம் செய்தல், பொது சமுதாய மற்றும் நிறுவன கழிப்பறைகளை சுத்தம் செய்தல், கழிவு நீர் குழாய் பராமரிப்புக்கள், கழிவுநீர் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையங்களில் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல், மழை நீர் வடிகால் சுத்தம் செய்தல் ஆகிய வைகள் தங்களது வீடுகளில் இருந்தால் கணக்கெ டுப்பிற்கு வரும் தூய்மை பணியாளர்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் தமிழக அரசின் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குழந்தை களின் கல்விக்கான கல்வி உதவித்தொகை முறைப்படுத்தப்பட்ட உடல்நல பரிசோதனை மற்றும் இலவச ஆயுள் காப்பீடு பணியில் பாதுகாப் பிற்கான திறன் பயிற்சி அனைவருக்கும் அடையாள அட்டைகள் ஆகியவைகள் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.