உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு

Published On 2023-10-13 15:12 IST   |   Update On 2023-10-13 15:12:00 IST
  • பேளாரள்ளி அரசு பள்ளியில் புகையிலை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நடந்தது.
  • அயோடின் சத்து அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தருமபுரி கலெக்டர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா வழிகாட்டுதல் படி உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பேளாரள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி யில், மாணவ மாணவர்க ளிடையே உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பொருள் பாக்கெட்டுகள், தின்பண்டங்கள் உள்ளிட்ட வைகளின் லேபிள்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து விழிப்புணர்வுடன், புகையிலை பொருட்களால் ஏற்படும் நோய்கள் குறித்தும் அதனை தவிர்த்தல், தடுத்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளி ஆசிரியர்கள் முத்துசாமி, வேலுசாமி மற்றும் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தார். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் , உணவு பொருள் பாக்கெட்டுகள் மற்றும் தின்பண்ட, குளிர்பான பாக்கெட்களில் காண வேண்டிய அம்சங்களான பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், உட்காரணிகள், ஊட்டச்சத்து தகவல்கள், நுகர்வோர் தொடர்பு எண் உள்ளிட்ட தகவல்கள் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். என்று உணவு பொருள் பாக்கெட்டுகள் கொண்டு விழிப்புணர்வு செய்தார். அயோடின் உப்பு குறித்தும் அயோடின் சத்து அவசியம் குறித்து விளக்க உரையாற்றினார்.

மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் உபயோகிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்கள் அதனை கண்டிப்பாக தவிர்த்தல், தடுத்தல் அவசியம் என்றதுடன் விற்பனை செய்வதை கண்டால் ஆசிரியர்களுக்கு தகவல் அளித்தால், உணவு பாதுகாப்புத் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விழிப்புணர்வு செய்தார் . புகையிலைப் பொருட்கள் தடுப்பு சார்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் பாபு சுந்தரம் மற்றும் ஆசிரியை யாழினி செய்திருந்தனர். பள்ளி தமிழ் ஆசிரியர் மகேந்திரன் நன்றி கூறினார். 

Similar News