உள்ளூர் செய்திகள்

பாலக்கோடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு தடைசெய்யப்பட்ட புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு

Published On 2023-09-12 15:30 IST   |   Update On 2023-09-12 15:30:00 IST
  • வாய்ப்புற்று நோய், நுரையீரல் புற்று நோய், காசநோய், மாரடைப்பு, போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
  • புகையிலை இல்லாத மாவட்டமாக தர்மபுரியை உருவாக்க உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தருமபுரி,  

தர்மபுரி மாவட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தி, மாவட்டம் முழுதும் உள்ள அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் இருபாலர் பள்ளி அருகில் உள்ள மளிகை மற்றும் பெட்டி,பீடா கடைகளில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்ப னை உள்ளனவா என ஆய்வு செய்து இருப்பின் உரிய நடவடிக்கை மேற் கொள்ளவும், மேலும் பள்ளிகளில் மாணவர்க–ளிடையே புகையிலை பொருட்கள் உபயோகிப்ப தால் ஏற்படும் நோய்கள், தீமைகள் குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்க உணவு பாது காப்பு துறைக்கு உத்தர விட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, மேற்பார்வை மற்றும் வழி காட்டலின்படி, காரிமங் கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவ லர் நந்தகோபால் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்க–ளுக்கு, உதவி தலைமை ஆசிரியர் சுதா முன்னிலையிலும், தலைமை ஆசிரியர் லட்சுமணன் தலைமையில் ஆசிரியர்கள், பங்கேற்புடன் தடை செய்யப்பட்ட புகையிலை , குட்கா பொருட்கள் குறித்தும் புகையிலை பொ ருட்கள் உபயோகிப்ப–தால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்பு–ணர்வு செய்யப் பட்டது. புகையிலை மற்றும் குட்கா போன்ற போதை வஸ்துகளால் ஏற்படும் நோய்களான வாய்ப்புற்று நோய், நுரையீரல் புற்று நோய், காசநோய், மார டைப்பு, போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அரசு இப்புகை யிலை மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வதை முற்றிலுமாக தடை செய்துள்ளது. மாணவர்கள் இதனை உணர்ந்து கண்டிப்பாக இதனை தவிர்த்திடவும் வீட்டில் யாரேனும் இது போன்ற புகையிலை பொருட்களை உபயோகம் செய்தால் இது குறித்து விழிப்புணர்வு செய்து தவிர்க்க வழிவகை மேற் கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.

தங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனையோ , பதுக்கி வைத்து இருந்தாலோ கண்டறிந்தால் உணவு பாதுகாப்புத்துறை புகார் எண் 9444042322 என்ற எண்ணிற்கு அலைபேசி வழியாகவோ, எஸ்.எம்.எஸ். மூலமாகவோ ,கட் செவி மூலமாகவோ அனுப்பினால் உடன் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்துக் கொண்டார். பின்னர் அனைவரும் புகை யிலை இல்லாத மாவட்ட மாக தர்மபுரியை உருவாக்கு வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு அலுவ லர் நந்தகோபால் பாலக் கோடு, முங்கப்பட்டி, எர்ணள்ளி, பாடி, செக்கோடி உள்ளிட்ட பகுதி களில் பெட்டி ,பீடா கடைகள் மற்றும் மளிகை கடைகளில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட் கள் உள்ளனவா என ஆய்வு செய்தார். மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்தும் விற்பனை கண்டறிந்தால் அபராதம், கடை செயல்பட தடை விதித்தல் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களில் இருந்த ஒரு கடைக்கு உடனடி அபராதம் ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது.

Similar News