உள்ளூர் செய்திகள்

தென்காசி மேலகரத்தில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

Published On 2023-08-11 14:42 IST   |   Update On 2023-08-11 14:42:00 IST
  • விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
  • நிகழ்ச்சியில் பல்வேறு பள்ளிகளில் இருந்து 40 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர்.

தென்காசி:

தென்காசி அருகே உள்ள மேலகரம் அரசுப்பொது நூலகம் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவை இணைந்து தென்காசி வட்டார பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு குறிஞ்சி வாசகர் பேரவை தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பொருளாளர் காசிவிஸ்வநாதன் முன்னிலை வகித்தார். வாசகர் பேரவை செயலர் சங்கரநாராயணன் வரவேற்று பேசினார்.

விழாவில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். பல்வேறு பள்ளிகளில் இருந்து 40 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றனர். முன்னதாக தென்காசி நூலகர் சுந்தர் வாழ்த்துரை வழங்கினார். நன்நூலகர் செங்கோட்டை ராமசாமி விழாவை தொகுத்து வழங்கினார்.

இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோற்கள் மற்றும் குறிஞ்சி வாசகர் பேரவையினர் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மேலகரம் பொறுப்பு நூலகர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News