உள்ளூர் செய்திகள்

நூலகத்தில் புரவலர்களுக்கு பட்டயம் வழங்கப்பட்ட காட்சி.

புரவலர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-01-11 12:28 IST   |   Update On 2023-01-11 12:28:00 IST
  • குருசாமிபாளையம் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் புரவலர் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • பள்ளி தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் 100 மாணவர்களை நூலக உறுப்பினராக சேர்க்க ரூ.2 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையம் கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் புரவலர் பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ரவி கலந்து கொண்டு 65 புரவலர்களுக்கு பட்டயம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் 9 பேர் புதிய புரவலராக சேர்ந்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கோடீஸ்வரன் 100 மாணவர்களை நூலக உறுப்பினராக சேர்க்க ரூ.2 ஆயிரம் நன்கொடையாக வழங்கினார். நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் தாளமுத்து தலைமை தாங்கினார். சதானந்தம் வரவேற்றார். பிள்ளா நல்லூர் பேரூராட்சி தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

ஊர் பெரிய தனக்காரர் ராஜேந்திரன், செங்குந்தர் மகாஜனப்பள்ளி செயலாளர் அர்த்தனாரி, நாகராஜன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராமன், டி.எஸ்.குணசேகரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் வாசகர் வட்ட நிர்வாகிகள் அலமேலு நாகமாணிக்கம், ஜோதி, சக்திவேல், சீனிவாசன், சண்முகசுந்தரம், கார்த்திகேயன், மேகநாதன், உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News