உள்ளூர் செய்திகள்

கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றபோது எடுத்த படம்.

ஆலங்குளம் அருகே வைத்தியலிங்கசுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்

Published On 2023-08-21 08:54 GMT   |   Update On 2023-08-21 08:54 GMT
  • விழாவின் 2-ம் நாள் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனத்திலும், இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.
  • வருகிற 28-ந் தேதி முக்கிய நிகழ்வான தேர் வீதி உலா நடைபெறுகிறது.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி காலை சிம்ம லக்கனத்தில் கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டது.

தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனையும், இரவில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியும் நடை பெற்றது.

விழாவின் 2-ம் நாள் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாச னத்திலும், இரவு விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாரா தனை, மண்டகப்படி தீபாராதனை, சுவாமி வீதி உலா நிகழ்வுகள் நடைபெறுகிறது.

விழாவின் 10 -ம் திருநாளான வருகிற 28-ந் தேதி முக்கிய நிகழ்வான தேர் வீதி உலா நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் திருத்தேரை வடம்பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

11 -ம் நாள் சுவாமி, அம்பாள் ரிஷப வாகன காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News