சத்துவாச்சாரியில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் சுதா தலைமையில் இன்று ஏலம் நடந்த காட்சி.
வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் கடைகள் ஏலம்
- ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயர்த்தப்படும்
- ஒப்பந்ததாரர்கள் பங்கேற்பு
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஏலம் மற்றும் பொது ஒப்பந்த புள்ளியில் குத்தகை இனங்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடைகள் ஏலம் 2-வது மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் சுதா தலைமையில் இன்று நடந்தது.
இதில் உதவி வருவாய் அலுவலர் குமரவேல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
2023-24 ஆம் ஆண்டு முதல் 26-ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளுக்கான குத்தகை ஏலம் நடந்தது.
இதில் பழைய மீன் மார்க்கெட் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கடைகள், இருசக்கர வாகன வசூல் உரிமம், பொருள் பாதுகாப்பு பெட்டகம், அருகில் உள்ள கட்டண கழிப்பிடம், பழைய பஸ் நிலைய பொருள் வைப்பு பாதுகாப்பு அறை உரிமம், பழைய பஸ் நிலையத்தின் அருகில் உள்ள பைக் நிறுத்துமிடம் பஸ் உள்ளிட்ட இடங்களுக்கு ஏலம் நடந்தது.
குத்தகை விடப்பட்ட கடைகளுக்கு ஆண்டுக்கு 5 சதவீதம் வாடகை உயர்த்தப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.