உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே பெண் மீது தாக்குதல்
- அதே பகுதி சேர்ந்தவர் ஜெயகாந்தன் இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது.
- காயமடைந்த நாகம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே ஏ.பி.குப்பத்தை சேர்ந்தவர் அய்யனார்,அதே பகுதி சேர்ந்தவர் ஜெயகாந்தன் இவர்கள் இருவர் குடும்பத்திற்கும் முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது. நேற்று மீண்டும் இவர்களுக்குள் தகராறுஏற்பட்டது.ஜெயகாந்தன் மற்றும் அவரது மகன்கள் திருவேந்திரன் (30) டிரைவர்,கொளஞ்சியப்பன் (32),ஆகியோர், அய்யனார் மனைவி நாகம்மாள் (50)என்பவரை அசிங்கமாக திட்டி இரும்பு கம்மி, தடியால் தாக்கினார்.
காயமடைந்த நாகம்மாள் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் இது குறித்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் திருவேந்திரன் (30)என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.