மின் விளக்கு இல்லாமல் இருட்டில் இயங்கும் ஏ.டி.எம் மையம்
- ஏ.டி.எம். அறையில் எந்த மின் விளக்கும் இல்லாமல் இருட்டாக உள்ளது.
- வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் , அரூரில் அரசு வங்கி இயங்கி வருகிறது. இங்கு வங்கி வாடிக்கையாளர்கள், உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் பணம் எடுப்பதற்கு வசதியாக 3 இடங்களில் ஏ.டி.எம். சென்டர் இயங்கி வருகிறது. இந்நிலையில் அரூர் திருவிக நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம். காலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறது. இது உள்ளூர் வெளியூர் வாடிக்கை யாளர்களுக்கு பயனுள்ள தாக இருந்தாலும் தொடர்ந்து ஏ.டி.எம். அறையில் எந்த மின் விளக்கும் இல்லாமல் இருட்டாக உள்ளது.
வாடிக்கையாளர்கள் பணத்தை எண்ணி சரிபார்க்க முடியாமல் பயத்துடன் வெளியே வந்து வெளிச்சத்தில் சரிபார்த்து செல்கிறார்கள். மேலும் இருட்டாக இருப்பதால் வெளியூர் பயணிகளுக்கு ஏ.டி.எம். இருப்பதும் தெரிவதில்லை. இதனால் பணம் எடுத்து செல்ல முடியாமல் அவதிப்ப டுகிறார்கள்.
இதனால் இரவு நேரங்களில் பணம் எடுக்கும் வரும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதனையடுத்து இருட் டில் இருக்கும் ஏ.டி.எம் அறைக்கு முறையான மின்விளக்குகள் அமைத்து தர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே வாடிக்கையா ளர்களின் கோரிக்கை யாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.