அதியமான் கல்லூரி மாணவிகள், கோணப்பட்டி கிராம சாலையோர பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொள்ளும் போது எடுத்த படம்.
அதியமான் மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
- முகாமில் 5-வது நாளாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கோண ப்பட்டி கிராம சாலையோர பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
- பாட்டிலில் நீரை நிரப்புதல், லெமன் மற்றும் ஸ்பூன் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி உற்சாகப்டுத்தினார்.
மத்தூர்,
பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் கோணப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்று வருகிறது.
சிறப்பு முகாமில் 5-வது நாளாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கோண ப்பட்டி கிராம சாலையோர பகுதிகளில் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
அரசு தொடக்க ப்பள்ளியில் தொடங்கி அரசு உயர்நிலை ப்பள்ளி வரை இப்பணியை மேற்கொ ண்டனர். அதன் பின் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவமாணவிகளுக்கு இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம், பாட்டிலில் நீரை நிரப்புதல், லெமன் மற்றும் ஸ்பூன் போன்ற விளையாட்டு போட்டிகளை நடத்தி உற்சாகப்டுத்தினார்.
இதனையடுத்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவி சுகந்தி அனைவரையும் வரவேற்றார். அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் சீனி. திருமால்முருகன் குழந்தை திருமணம் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், குடும்ப சூழ்நிலையில் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் விளக்கி தலைமையு ரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு கிருஷ்ணகிரி இளம் சிறார் நீதி குழுமம் உறுப்பினர் வின்சென்ட் சுந்தர்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் முடிவில் நாட்டு நலப்பணி திட்ட மாணவி சவுமியா நன்றி கூறினார்.