உள்ளூர் செய்திகள்

தனியார் டிபார்ட் மெண்ட்ஸ்டோரில் உணவுத்துறை அலுவவலர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

ஊத்தங்கரையில் உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை

Published On 2022-10-21 09:42 GMT   |   Update On 2022-10-21 09:42 GMT
  • உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
  • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியுள்ளார்.

 மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பள்ளிகள் அருகாமையில் உள்ள கடைகளில் போதை சாக்லேட் விற்பதாக உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மாவட்ட நியமன அலுவலர் அறிவுத்தலின் பேரில் ஊத்தங்கரையில் உள்ள பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் நாகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஊத்தங்கரை வணிகர் சங்க செயலாளர் உமாபதி இருந்தார்.

ஆய்வின் போது சந்தேகத்துக்குரிய சுமார் ஒரு கிலோ எடையுள்ள சாக்லேட்டை சங்கர் டிரேடிங் கம்பெனியில் கண்டறியப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

சோதனை முடிவில் சாக்லேட்டுகள் அனைத்தும் போதை சாக்லேட் என கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News