உள்ளூர் செய்திகள்

மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

உடையாளூரில், மாமன்னன் ராஜராஜசோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்

Published On 2023-10-25 10:13 GMT   |   Update On 2023-10-25 10:13 GMT
  • தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று மாமன்னன் ராஜராஜசோழன் 1038-வது சதய விழா நடந்தது.
  • காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று மாமன்னன் ராஜராஜ சோழன் 1038-வது சதய விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழ் தேசிய பேரியக்கம், காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது உடையா ளூரில் மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பேரியக்கம் நிர்வாகிகள் வைகறை, பழ. ராஜேந்திரன், சீனிவாசன், தனசேகரன், பாலன், தீன் தமிழன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் சாமி கரிகாலன், வெள்ளா பெரம்பூர் ரமேஷ், செந்தில் வேலன், விஜய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News