உள்ளூர் செய்திகள்

விவசாய தொழிலாளர் சங்க மாநாடு நடந்தது.

திருத்துறைப்பூண்டியில், விவசாய தொழிலாளர் சங்க மாநாடு

Published On 2023-01-29 10:07 GMT   |   Update On 2023-01-29 10:07 GMT
  • முதியோர் உதவி தொகை ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும்.
  • 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட 20-வது மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு மண்ணை சாலையில் அமைந்துள்ள சீனிவாசராவ் நினைவிடத்திலிருந்து சுடர் ஒளி ஏற்றி ஊர்வலமாக வந்து கொடியேற்றி மாநாட்டை தொடங்கினர்.

மாநாட்டுக்கு மாவட்ட தலைவர் கலைமணி தலைமை தாங்கினார். இதில் விவசாயத் தொழிலாளிக்கு தனித்துறையை உருவாக்கிட வேண்டும், முதியோர் உதவித் தொகை ரூ. 3000 உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் அமிர்தலிங்கம் மாநில பொதுச் செயலாளர், சங்கர் மாநில பொருளாளர், குமாரராஜா மாவட்ட செயலாளர், கந்தசாமி மாவட்ட துணைத்தலைவர், பாலைய்யா மாவட்ட பொருளாளர், லிங்கம் மாவட்ட துணை செயலாளர், மணியன் மாவட்ட துணை செயலாளர், மாரியம்மாள் மாநிலக்குழு, மணி மாவட்டத் துணைத் தலைவர், ரவி ஒன்றிய செயலாளர், சுப்பிரமணியன் நகர செயலாளர், ஜீவானந்தம் ஒன்றிய தலைவர், கார்த்தி நகர தலைவர், மாநில மாவட்ட நகர ஒன்றிய குழு உறுப்பினர்கள் 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News