உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் மெகாைசஸ் மஞ்சள் பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போது எடுத்த படம்.

கிருஷ்ணகிரி மாங்கனி கண்காட்சியில் மெகா சைஸ் மஞ்சள் பை வைத்து விழிப்புணர்வு

Published On 2022-06-24 15:34 IST   |   Update On 2022-06-24 15:34:00 IST
  • மஞ்சள் பை 46 அடி உயரமும், 20 அடி அகலம், ஆயிரத்து 50 மீட்டர் மஞ்சள் துணியால் தயாரிக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ளது.
  • மாங்கனி கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் இந்த மெகா சைஸ் மஞ்சள் பையைப் வியப்புடன் பார்த்து செல்பி எடுத்துக் செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அகில இந்திய மாங்கனி கண்காட்சி யில் நகர்மன்ற தலைவர் ஏற்பாட்டின் பேரில் மெகா சைஸ் மஞ்சள் பை வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்கவும், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மஞ்சள் பை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் கடந்த ஆறு மாதங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு 20 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, கிருஷ்ணகிரி நகர் மன்றத் தலைவர் பரிதா நவாப், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சாலையோரக் கடைகள், தள்ளு வண்டிகள், காய்கறிக் கடைகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து, அதற்கு மாற்றாக மஞ்சள் பையை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. இக்கண்காட்சியின் நுழைவு வாயிலில், நகர்மன்ற தலைவர் ஏற்பாட்டின் பேரில், மெகா சைஸ் மஞ்சள் பை வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மஞ்சள் பை 46 அடி உயரமும், 20 அடி அகலம், ஆயிரத்து 50 மீட்டர் மஞ்சள் துணியால் தயாரிக்கப்பட்டு, கட்டப்பட்டுள்ளது.

மாங்கனி கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் இந்த மெகா சைஸ் மஞ்சள் பையைப் வியப்புடன் பார்த்து செல்பி எடுத்துக் செல்கின்றனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பொழுது போக்கு நிகழ்ச்சியில், பொதுமக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த மெகா சைஸ் மஞ்சள் பை அனைவரையும் கவர்ந்துள்ளது குறிப்பி டத்தக்கது.

Similar News