உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்விற்கான மாதிரி தேர்வு

Update: 2022-06-25 08:47 GMT
  • கிருஷ்ணகிரி மாவட்டமைய நூலகத்தில் பயிற்சி தேர்வுகள் நடக்கின்றன.
  • இதில் போட்டி தேர்வுகள் குறித்த பயிற்சிகள் இடம்பெறும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில், அரசு தேர்வாணையம் நடத்தும் போடடித் தேர்விற்கான மாதிரி தேர்வு நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி தலைமையில், மைய நூலகர் பிரேமா முன்னிலையில் போட்டித் தேர்வு நடந்தது. இந்த போட்டித் தேர்வினை உதவியாளர் சாந்தலிங்கம், நூல் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் நந்தகுமார் ஆகியோர் நடத்தினர்.

மாவட்ட மைய நூலகம் மற்றும் எம்ப்ளாய்மெண்ட் கைடு ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய இந்த போட்டித் தேர்விற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகண்டன் செய்திருந்தார். இதில் 53 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மேலும், மாவட்ட மைய நூலகத்தில் அடுத்து வரும் 3 ஞாயிற்றுக் கிழமைகளில் இதே போல் மாதிரி போட்டித் தேர்வு நடைபெறும் என்றும், இதில் அதிக அளவில் போட்டித்தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் பங்கேற்று தேர்வினை எழுத வேண்டும் என்றும் மாவட்ட நூலக அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News