உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கேடயம் வழங்கினார்.

தஞ்சையில், அரசு பணியாளர்களுக்கு தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம்

Published On 2023-01-08 10:48 GMT   |   Update On 2023-01-08 10:48 GMT
  • அரசு பணியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு கலெக்டர் கேடயம் வழங்கினாா்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி துறை சாா்பில் அரசுப் பணியாளா்களுக்கு தமிழ் ஆட்சி மொழிப் பயிலரங்கம் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்துக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். இதில், மொழிப்பயிற்சி, ஆட்சிமொழி வரலாறும் சட்டமும், கணினிப்பயிற்சி, ஆட்சிமொழி அரசாணை களும் செயலா க்கமும், மொழிபெயா்ப்பும் கலை ச்சொல்லாக்கமும், ஆட்சிமொழி ஆய்வும் குறை களைவு நடவடிக்கைகளும் மற்றும் தமிழில் குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியமாக்கல் ஆகிய தலைப்புகளில் அரசுப் பணியாளா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும், 2020 ஆம் ஆண்டு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாகத் தெரிவு செய்யப்பட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்துக்கு ஆட்சியா் கேடயம் வழங்கினாா். இக்கேடயத்தை அந்த அலுவலகம் சாா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன் பெற்றுக் கொண்டாா்.

இக்கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இயக்குநா் எழிலரசு, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சபீா்பானு, மன்னா் சரபோஜி அரசுக் க ல்லூரி உதவிப் பேராசிரியா் அமுதா, அரசா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News