உள்ளூர் செய்திகள்

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை மனு

Published On 2022-10-19 09:22 GMT   |   Update On 2022-10-19 09:22 GMT
  • பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாநிலத்திலிருந்தே பணி அமர்த்தப்படுகின்றனர்.
  • 90 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வேலை கொடுக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திராவிடர் விடுதலைக் கழக மாவட்டத் தலைவர் வாஞ்சிநாதன் தலைமையில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த மூன்று ஆண்டுகளாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கூத்தனப்பள்ளி கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளி மாநிலத்திலிருந்தே பணி அமர்த்தப்படுகின்றனர். மேலும் 18 முதல் 21 வயது வரை என்கிற வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்றும், உள்ளூர் மக்களுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட பகுதி மக்களுக்கும் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது போன்ற நிறுவனத்திற்காக விளை நிலங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்து துன்பப்படும் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல், வட மாநிலத்திலிருந்து இளம் பெண்களை அழைத்து வந்து புறா கூண்டில் அடைப்பது போல் அடிமைப்படுத்தியும், அவர்களின் உழைப்பும் சுரண்டப்படுகிறது. உள்ளூர் மக்களுக்கு 5 சதவீத வேலை வாய்ப்புகூட வழங்கவில்லை. இதனை இரட்டை துரோகமாகவே மக்கள் கருதுகின்றனர்.

மேலும் மாசு நிறைந்த காற்றை சுவாசித்தும், ரசாயனம் கலந்த நீரை குடித்தும் பாதிப்புக்குள்ளாகு கின்றனர். கடந்த 1974ல் நடந்த திமுக ஆட்சியில் 80 சதவீத வேலை வாய்ப்பு தமிழக மக்களுக்கே என அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது குறைந்தது 90 சதவீதம் உள்ளூர் மக்களுக்கே வேலை கொடுக்க வேண்டும் என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News