உள்ளூர் செய்திகள்

சீர்காழியில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மீண்டும் நின்று செல்லும்

Published On 2023-07-12 14:57 IST   |   Update On 2023-07-12 14:57:00 IST
  • தற்பொழுது இரு மார்க்கமாக 5 ரெயில்கள் சீர்காழியில் நின்று செல்லும்.
  • அந்தியோதயா விரைவு ரெயில், சீர்காழியில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளது.

சீர்காழி:

சீர்காழியில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது ;-

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் ஒரு வழி மார்க்கமாக நின்று சென்று கொண்டிருந்த ஐந்து ரெயில்கள் இரு வழி மார்க்கமாக நின்று செல்வதற்கு பல்வேறு முயற்சிகளை சீர்காழி ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் உள்ளிட்டோர் மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அவர்களுக்கு ஆதரவாக ராமலிங்கம் எம்.பி,யுடன் நான் திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு உள்ள ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து பல்வேறு மனுக்களை அளித்தோம்.

இதன் பிரதிபலனாக தற்பொழுது இரு வழி மார்க்கமாக 5 ரெயில்கள் சீர்காழியில் நின்று செல்லும் என ரெயில்வே மேலாளர் ஹரிகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன் நகலை ரயில் உபயோ கிப்பாளர்கள் சங்கத்தினர் பெற்றுவந்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் சீர்காழியில் நிற்காமல் செல்லும் அந்தியோதயா விரைவு ரயில், சீர்காழியில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதற்கு முயற்சி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வுக்கு இனிப்புகளை வழங்கினர்.

அப்போது ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர் கஜேந்திரன், செயலாளர் மார்க்ஸ் பிரியன், பொருளாளர் முஸ்தபா நந்தகுமார், ரயில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெகசண்முகம், தி.மு.க நகர செயலாளர் சுப்பராயன், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், வர்த்தக சங்க பொறுப்பாளர்கள் துரை, நவக்கிரக சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News