உள்ளூர் செய்திகள்

 ஊத்தங்கரை வாரச்சந்தையில் விற்பனைக்கு குவிந்த கறவை மாடுகள்.

ஊத்தங்கரை வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை களை கட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-07-02 14:21 IST   |   Update On 2022-07-02 14:22:00 IST
  • ஊத்தங்கரை வாரசந்தையில் மாடுகள் விற்பனை களைகட்டியது.
  • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகே மாட்டு சந்தை வெள்ளிக்கிழமை நாட்களில் நடைபெறும். இந்த சந்தையில் ஊத்தங்கரை மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளான சிங்காரப்பேட்டை ,அனுமன் தீர்த்தம் , காரப்பட்டு, சாமல்பட்டி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களாக உள்ள திருப்பத்தூர் தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கால்நடைகளுடன் வந்து குவிந்தனர்.

மாடுகளை வாங்குவதற்காக கேரளம் மாநிலம், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரண்டனர். மாடுகள் விற்பனை களைகட்டியது. ஒரேநாளில் 50 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த வார சந்தைக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் சிரமம் இன்றி சென்று வரும் வகையில் பாதைகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News