உள்ளூர் செய்திகள்

ஜூஜூவாடி அரசு பள்ளியில், ரூபாய் நோட்டு மற்றும் நாணய கண்காட்சியை மேயர் சத்யா திறந்து வைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.

ஓசூர் அருகே ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச ரூபாய் நோட்டுகள் -நாணயங்கள் கண்காட்சி

Published On 2022-11-09 15:05 IST   |   Update On 2022-11-09 15:05:00 IST
  • சர்வதேச ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.
  • மேயர் எஸ். ஏ.சத்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

ஓசூர்,

ஓசூர் அருகே ஜூஜூவாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண்காட்சியை, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ். ஏ.சத்யா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் எச். ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வரவேற்றார்.

கண்காட்சியில், 150 நாடுகளின் மற்றும் இந்திய அரசர்கள் காலத்து ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் இடம் பெற்றிருந்தன. நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ஓசூர் மாநகராட்சி நகரமைப்புக்குழு தலைவர் எம்.அசோகா, கல்வித்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்தி பேசினார்கள்.

ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் வரலாறு குறித்து சிறப்பு விருந்தினர்களுக்கு,மாணவ மாணவியர் விளக்கி கூறினர். மேலும், மண்டல தலைவர் ரவி, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், பேகேபள்ளி ஊராட்சி தலைவர் சைத்ரா அருண், மாநகராட்சி கல்விக்குழு உறுப்பினர்கள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர், ஆனந்த ரெட்டி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள் உள்பட பலர் கண்காட்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News