உள்ளூர் செய்திகள்

திருஞானசம்பந்தர்- தோத்திர பூரணாம்பிக்கைக்கு திருக்கல்யாணம் நடந்தது.

ஆச்சாள்புரத்தில், திருஞானசம்பந்தர்- தோத்திரபூரணாம்பிக்கை திருக்கல்யாண விழா

Published On 2023-06-06 15:40 IST   |   Update On 2023-06-06 15:40:00 IST
  • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு எழுந்தருளினர்.
  • சீர்வரிசை பொருட்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்று மையம்மை உடனாகிய சிவலோக தியாகராஜசாமி கோவில் உள்ளது.

இக்கோவிலில் தனி சன்னதியில் திருமண கோலத்தில் திருஞானசம்பந்த பெருமான்-தோத்திர பூரணாம்பிகையுடன் அருள்பாலிக்கிறார்.

மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் திருஞா னசம்பந்தர் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா நடைபெற்றது.

முன்னதாக, திருஞான–சம்பந்தபெருமான்- தோத்திரபூரணாம்பி–கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று.

சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு எழுந்தருளினர்.

விழாவை யொட்டி ஏராளமான பக்தர்கள் திருமண சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து திருமண சடங்குகள் தொடங்கியது.

வேத விற்பன்னர்கள் திருமந்திரம் ஓத சிறப்பு ஹோமம் நடைபெற்று தோத்திர பூரணாம்பிக்கைக்கு சிவாச்சாரியார்கள் மங்களநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News