உள்ளூர் செய்திகள்
தொழிலாளி மீது உருட்டு கட்டையால் தாக்குதல்
- அந்த 2 பேர் உருட்டு கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
- இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே எம்.சி.பள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் நேற்று மகாராஜாகடை அருகே சென்றுள்ளார்.
அப்போது அங்கு மதுவாங்க வந்த பொன்னேரி மாடம் அருகேயுள்ள மாரிகவுண்டன் சவுளூர் பகுதியை சேர்ந்த மதன்குமார், நவீன் ஆகியோர் முருகனிடம் தகராறு செய்தனர்.
இதில் ஆத்திரம் அடைந்த அந்த 2 பேர் உருட்டு கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து மகாராஜா கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.