உள்ளூர் செய்திகள்

நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயி

Published On 2022-10-31 15:07 IST   |   Update On 2022-10-31 15:07:00 IST
  • பொது வழிப்பாதையை ஒதுக்கித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்.
  • அந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கந்தசாமி தீக்குளிக்க முயன்றார்.

தருமபுரி,

தருமபுரியை அடுத்த முத்தம்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி. விவசாயி.இவருக்கு கிருஷ்ணகவுண்டனூர் கிராமத்தில் சொந்தமாக நிலம் உள்ளது.இவரது நிலத்திற்கு அருகே பொது வழி பாதை இருந்துள்ளது.

அந்த பாதையை தனிநபர் ஒருவர் அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கந்தசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

ஆனாலும் அவருக்குரிய வழிப்பாதையை ஒதுக்கிவிடாமலும், இதுகுறித்து நியாயம் கேட்க சென்றால் கந்தசாமியை தாக்க வருவதாகவும்,எனவே உரிய நடவடிக்கை எடுத்து தனக்குரிய பொது வழிப்பாதையை ஒதுக்கித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று தருமபுரி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த கந்தசாமி தீக்குளிக்க முயன்றார்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து கைப்பற்றினர்.பின்னர் அவரை எச்சரித்து கலெக்டர் அலுவலகத்தில் அவரது கோரிக்கை மனுவை கொடுத்து செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடக்கும் நாட்களில் இதேபோல தீக்குளிப்பு முயற்சிகள் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News