உள்ளூர் செய்திகள்

செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள் - பொதுமக்கள் குற்றச்சாட்டு

Published On 2022-07-13 10:31 GMT   |   Update On 2022-07-13 10:31 GMT
  • பழங்கள் செயற்கை முறையில் கார்பைடுகல் வைத்தும், சாயம் ஸ்பிரே செய்தும் பழுக்க வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
  • பொதுமக்கள் வித்தியாசம் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துவதால் உடல்பாதிப்பும், பண விரயமும் ஏற்படுகிறது.

சீர்காழி:

சீர்காழியில் பெரும்பா லான கடைகளில்செயற்கை முறையில் பழங்கள் பழுக்க வை க்கபடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர்.இதனை உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்திட வலியுறு த்தப்பட்டுள்ளது.

சீர்காழியில்மாம்பழம், வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் செயற்கை முறை யில் கார்பைடுகல் வைத்தும், சாயம் ஸ்பிரே செய்தும் பழுக்கவைக்கப்படுவதாக நீண்ட நாட்களாகபொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த வகை பழங்களைவாங்கி சாப்பிடும்போது உடல்உ பாதை, வயிற்றுபோக்கு, வயிற்றுவலி, செரிமான பிரச்சனை போன்றபிரச்ச னைகள் வரும்என மருத்துவ ர்கள்தெரிவிக்கி ன்றனர்.

குழந்தைகளுக்கு பழங்கள் கொடுக்கும் போது செயற்கைமுறையில் பழுக்கவைத்த பழங்களால் பெரும் பாதிப்பு வயிற்றுபோக்கு ஏற்படுகிறது. இயற்கையான முறையில் பழுத்தபழங்கள், செயற்கை முறையில் பழுக்கவைத்த பழங்கள் எவை, எவை என பொதுமக்கள் வித்தியாசம் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துவதால் உடல்பாதிப்பும், பணவி ரயமும்ஏற்படுகிறது. செயற்கைமுறையில் பழங்கள் பழுக்கவைக்க ப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை பொருட்படுத்துவதில்லை.இதனால் பொதுமக்கள்தான் பாதிப்புக்குள்ளாகின்றனர்.ஆகையால் சீர்காழி பகுதியில் செயற்கை முறையில் பழங்கள் பழுக்கவைத்து விற்பனை செய்யும் கடை உரிமை யாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News