உள்ளூர் செய்திகள்

ஜேடர்பாளையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். 

ஜேடர்பாளையத்தில் அடுத்தடுத்து தீ வைப்பு:இருதரப்பினர் இடையே கலெக்டர், எஸ்.பி. அமைதி பேச்சுவார்த்தை

Published On 2023-03-23 15:03 IST   |   Update On 2023-03-23 15:03:00 IST
  • மேல்முகம் கிராமம், வீ.கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நித்யா என்பவர் கடந்த 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
  • இதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் வட்டம், வடகரையாத்தூர், மேல்முகம் கிராமம், வீ.கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நித்யா என்பவர் கடந்த 11-ந் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இதை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குடிசைக்கு தீ வைப்பு

இக்கொலையை சிலர் தவறாக சித்தரித்தன் விளை வாக வடகரையாத்தூர் மேல்முகம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தகர சீட், ஓலை வேய்ந்த குடிசைகள் மற்றும் புதுப் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலை கொட்டகை ஆகியவை மர்ம நபர்களால் தீ வைக்கப் பட்டது. தீ வைத்தவர்களை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வடகரையாத்தூர் மேல்முகம் கிராமம் சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான 3 டிராக்டர்கள் மற்றும் தகர வீடு தீ வைக்கப்பட்டது. மேலும் வடகரையாத்தூரில் ஒரு வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து இந்த சம்பவங்களீல் தொடர்பு உடையவர்களை தேடி வருகிறார்கள்.

அடுத்தடுத்த சம்பவங்க ளால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. இதை தொடர்ந்து ஜேடர்பாளையத்தில் வடகரையாத்தூர், வீ.கரைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த இருதரப்பினர் இடையே அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார்ய. மாவட்ட போலீஸ் சூப் பிரண்டு கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:-

இந்த பகுதியில் அசாதா ரண சூழ்நிலையை சிலர் தவறாக பயன்படுத்தி தேவையற்ற அசம்பா விதங்களை உருவாக்க நினைப்பார்கள். இது போன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் கிராமத்தில் அமைதி நிலை காக்க கிராமங்களை சேர்ந்த அனைவரும் முழு ஒத் துழைப்பு வழங்க வேண்டும்.

கிராம மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும். மேலும் தவறான தகவல்களை சமூக ஊடகங்களில் வெளியிடு பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக வடகரை யாத்தூர் மற்றும் வீ.கரைப் பாளையம் கிராம பகுதியை சேர்ந்த இருதரப்பினரின் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் டி.எஸ்.பி. கலையரசன், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. கவுசல்யா, பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி ஆகியோர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News