உள்ளூர் செய்திகள்

சென்னையில் இருந்து நெல்லைக்கு ரெயில் மூலம் 1900 டன் யூரியா உரம் வருகை

Published On 2022-11-20 09:09 GMT   |   Update On 2022-11-20 09:09 GMT
  • நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • இன்று ரெயில் மூலமாக யூரியா உரம் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

நெல்லை:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பயிர் நல்லமுறையில் துளிர்த்து வளருவதற்கு யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட ரசாயன உரங்கள் தேவைப்படுகிறது. இதனால் போதிய உரம் இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி சென்னையில் இருந்து இன்று ரெயில் மூலமாக யூரியா உரம் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தடைந்தது.

மொத்தம் 1,900 டன் யூரியா உரம் ரெயிலில் வந்தடைந்தது.

இந்த உர மூடைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Tags:    

Similar News