உள்ளூர் செய்திகள்

செந்தில் பாலாஜி கைது: நடைமுறை என்ன?

Published On 2023-06-14 07:10 IST   |   Update On 2023-06-14 08:12:00 IST
  • அமலாக்கத்துறை நேற்று செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தியது
  • விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சுமார் 12 மணி நேர சோதனைக்குப்பின் விசாரணைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர், அவரை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமைச்சராக இருக்கும் ஒருவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தால், மேற்கொள்ளப்படும் நடைமுறை என்ன என்பதை பார்ப்போம்.

1. அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரை கைது செய்தார்கள் என்றால், அதுகுறித்து சட்டப்பேரவை செயலகத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்படும்.

2. சட்டப்பேரவை செயலகம் மூலம் சபாநாயகருக்கு தெரியப்படுத்தப்படும்.

3. சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தால் உடனடியாக சட்டப்பேரவையில் தெரியப்படுத்தப்படும்.

4. சட்டப்பேரவை நடைபெறாத நிலையில், 5 நாட்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தப்படும்.

Tags:    

Similar News