கடன் மேளாவில் கலந்து கொள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு அழைப்பு
- அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் கடன் மேளாவில் கலந்து கொள்ள விவசாயிகள், பொதுமக்களுக்கு அைழப்பு
- கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் தொழில் நுட்பச் சேவைகளை விளம்பர ப்படுத்துதல் போன்ற நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படுகிறது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களிலும் கடன் மேளா நடத்தப்படுகிறது என்று மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நுற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல் கொண்டா டப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கூட்டுறவு துறை சார்பில் கடன் மேளா நடத்தப்படுகிறது.
அதன்படி இன்று(செப்.15) அரியலூர் மற்றும் திருமானூர் ஒன்றியங்களில் உள்ள 24 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், செப்.22 ஆம் தேதி செந்துறை, ஜெய ங்கொண்டம், ஆண்டிமடம் மற்றும் தா.பழூர் ஒன்றிய ங்களில் உள்ள 40 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடன் மேளாக்கள் நடைபெற்றது.
இம்மேளாக்களில் வைப்புகள் திரட்டுதல், பயிர்க்கடன், சுய உதவிக் குழுக் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், டாப்செட்கோ கடன். டாம்கோ கடன், தாட்கோ கடன், மாற்றுத்திறனாளி கடன், மத்திய காலக் கடன் மற்றும் தான்ய ஈட்டுக்கட ன்களு க்கான விண்ணப்ப ங்கள் விநியோகி த்தல், புதிய சேமிப்பு கணக்குகள் துவங்குதல், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றும் திட்டம் கடன் மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் தொழில் நுட்பச் சேவைகளை விளம்பர ப்படுத்துதல் போன்ற நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படுகிறது.
எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கடன் மேளாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.