உள்ளூர் செய்திகள்

நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி படுகாயம்

Published On 2023-07-10 11:32 IST   |   Update On 2023-07-10 11:32:00 IST
  • நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் தொழிலாளி படுகாயமடைந்தார்
  • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் கா.அம்பாபூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையன். இவரது மகன் செல்வராஜ் (வயது 48). இவர் விளாங்குடி-ஒரத்தூர் சாலையில் உள்ள நெல் குடோனில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் ஒரு லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றி விட்டு அடுத்த லாரியில் நெல் மூட்டையை ஏற்றுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த லாரியில் சரியாக அடுக்கப்படாமல் இருந்த நெல் மூட்டைகள் சரிந்து செல்வராஜ் மீது விழுந்தது. இதில் செல்வராஜ் படுகாயமடைந்தார். பின்னர் இவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்ந்து செல்வராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் இது குறித்து செல்வராஜ் கயர்லாபாத் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

Similar News