உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மக்கள் தொடர்பு முகாமில் 244 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-08-11 09:55 GMT   |   Update On 2022-08-11 09:55 GMT
  • முகாமுக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
  • முகாமில் 244 பயனாளிகளுக்கு, 30 லட்சத்து, 42 ஆயிரத்து 721 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள சன்னாவூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 244 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, அனைத்து துறைகள் சார்பில் 244 பயனாளிகளுக்கு, 30 லட்சத்து, 42 ஆயிரத்து 721 ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

முகாமில், வட்டார வேளாண் உதவி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அன்பரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராஜ், ஜாகிர்உசேன், வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர் ஜார்ஜ் வாஷிங்டன், ஒன்றியக் குழு தலைவர் அ.சுமதி, கவுன்சிலர் ச.ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறை அலுவலர்கள், தங்களது துறைகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்துரைத்தார். முன்னதாக வட்டாட்சியர் குமரையா வரவேற்றார். முடிவில், ஊராட்சித் தலைவர் நல்லுசாமி நன்றி தெரிவித்தார்

Tags:    

Similar News