உள்ளூர் செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-11-25 06:04 GMT   |   Update On 2023-11-25 06:04 GMT
ஜெயங்கொண்டம் அருகே வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கை கொண்ட சோழபுரம் கிராமத்தில் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உடன் ஜெயங்கொண்டம். தாசில்தார் கலியலூர் ரகுமான், தேர்தல் துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் காமராஜ், கிராம உதவியாளர் தனசேகர் மற்றும் குண்டவெளி பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் ஜெயங்கொண்டம் நேஷனல் தொழில் பயிற்று நிறுவனம் மாணவர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திரளாக பேரணியில் கலந்துக் கொண்டு வாக்காளர் சுருக்க முறை திருத்தம்- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று மற்றும் நாள தேர்தல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது குறித்தும் அதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், புதிய வாக்காளர் அடையாளத்தை பெறுதல் ,தொகுதி மாற்றம் செய்தல், ஆதார் அட்டை இணைத்தல் குறித்து பேரணியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தனர். வாக்காளர் விழிப்புணர்வு பேரணி கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் முன்பு ஆரம்பித்து அரசு மேல் நிலைப்பள்ளி வளாகம் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News