உள்ளூர் செய்திகள்

ஆண்டிமடம் ஊராட்சியில் ஒன்றிய குழு கூட்டம்

Published On 2023-04-07 11:36 IST   |   Update On 2023-04-07 11:36:00 IST
  • ஆண்டிமடம் ஊராட்சியில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
  • ஒன்றிய குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர்.

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேன்மொழி வைத்தி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஸ்ரீதேவி வரவேற்று பேசினார். ஒன்றிய அலுவலக கணக்கர் பாக்யராஜ் தீர்மானங்களை வாசித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். அதற்கு பதில் அளித்து பேசிய ஒன்றிய குழு தலைவர் மருதமுத்து உறுப்பினர்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று கூறினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) நாராயணசாமி நன்றி தெரிவித்து பேசினார்.




Tags:    

Similar News