ஜெயங்கொண்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
- பள்ளியை சுற்றி உள்ள ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களை பள்ளியில் சேர்க்காமல் உள்ளவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்.
- பள்ளியைச் சுற்றி மாற்றுத்திறன் உடைய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேல்குடிப்பு கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சிகூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு பயிற்சியாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார்.
வார்டு கவுன்சிலர் அம்பிகாபதி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரவேற்றார். பள்ளி தலைவர் வளர்மதி பயிற்சி பற்றி விளக்கினார். மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பள்ளியை சுற்றி உள்ள ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களை பள்ளியில் சேர்க்காமல் உள்ளவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது,
பள்ளியைச் சுற்றி மாற்றுத்திறன் உடைய மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தலைமை ஆசிரியர் ஆசிரியர்களுக்கு உறுதுணையாக இருந்து சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்,
பள்ளியின் செயல்பாடுகளை கண்காணித்து மற்றும் மாணவருடைய கற்றல் திறனை கவனித்து அதற்கேற்ற கற்றல் சூழல்கள் பள்ளியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்டது.