உள்ளூர் செய்திகள்

போலீசார் சார்பில் முப்பெரும் விழா

Published On 2022-10-15 06:51 GMT   |   Update On 2022-10-15 06:51 GMT
  • போலீசார் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
  • விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், செந்துறை போலீசார் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் முதல் கட்டமாக போதைப்பொருள் ஒழிப்பு, இணைய குற்றத்தை தடுத்தல், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. செந்துறை பிள்ளையார் கோவில் அருகே தொடங்கி இந்த ஊர்வலத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 1000 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து திருமண மண்டபத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும், வெற்றி நிச்சயம் என்ற வினாடி-வினா போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டிக்கு வந்தவர்களை செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் வரவேற்றார். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். செந்துறையில் முதன்முறையாக மாணவர்களை உள்ளடக்கிய பிரமாண்ட ஊர்வலம் மற்றும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக போலீசார் சார்பில் நடத்தப்பட்ட வெற்றி நிச்சயம் போட்டிகளும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் சிறப்பாக செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார். இந்த விழாவில் அரியலூர் துணைப் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கணேஷ், இணைய குற்ற தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்ட திரளான போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News