உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published On 2022-08-09 10:10 GMT   |   Update On 2022-08-09 10:10 GMT
  • கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பள்ளிக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

அரியலூர்:

செந்துறை அடுத்த சோழன்குடிக்காடு கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பால்குடத் திருவிழாவுக்காக அப்பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள், பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். இதற்கு காவல்துறையை சேர்ந்த சிலரும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் நேற்று காலை பள்ளிக்குச் சென்ற ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை, பள்ளிக்குள் நுழைய விடாமல் மாற்று சமுகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தடுத்த நிறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் அன்பானந்தம் தலைமையில் கலெக்டரிடம் மாணவர்கள் மற்றும் ெபற்றோர்கள் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், 10 நபர்கள் உள்ளே சென்று மனு அளிக்க கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. ஆனாலும் அனைவரையும் உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், காவல்துறையை கண்டித்தும், கலெக்டர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே, கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட முகாமை முடித்துக்கொண்டு வெளியில் வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறி அவர்களிடமிருந்து மனுவினை பெற்றுக் கொண்டார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News