உள்ளூர் செய்திகள்

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்

Published On 2023-08-29 12:10 IST   |   Update On 2023-08-29 12:10:00 IST
  • அரியலூரில் பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்
  • உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள புளியங்குழி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் அன்பரசன் (வயது 31). விவசாயி. இவரது மனைவி சந்தியா (27). அன்பரசன், தனது தந்தை பன்னீர்செல்வத்துடன் நேற்று அதிகாலை தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். வயலில் தண்ணீர் பாய்ச்சிவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது திடீரென்று அன்பரசனை பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை, பன்னீர்செல்வம் அருகில் உள்ள சுத்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அன்பரசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பன்னீர்செல்வம் அளித்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News