உள்ளூர் செய்திகள்

சிறுமியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது

Published On 2023-08-25 11:54 IST   |   Update On 2023-08-25 11:54:00 IST
  • சிறுமியை கடத்திய டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
  • திருமணம் செய்வதற்காக கூறி

அரியலூர்

பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி காலனி தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 27), லாரி டிரைவர். இவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சிறுமியை திருமணம் செய்வதற்காக ஆனந்தராஜ் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெகநாத் தலைமையிலான போலீசார் ஆனந்தராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News