உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க கோரிக்கை

Published On 2023-08-17 06:52 GMT   |   Update On 2023-08-17 06:52 GMT
  • அரியலூரில் ஒருங்கிணைந்த கல்வி வளாகம் அமைக்க கோரிக்கை விடப்பட்டு உள்ளது
  • காங்கிரஸ் கூட்டத்தில் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அரியலூர்

அரியலூர் நகரத்திலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்க: அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி வகுப்பறைகளை ஆக்கிரமித்து அலுவலகமாக செயல்பட்டு வரும் கல்வி அலுவலகங்களை, பயன்படுத்த படாமல் உள்ள பழைய பயணியர் மாளிகை வளாகத்தில் புதிய கட்டடம் கட்டி அங்கு ஒருங்கிணைந்த கல்வி வளாகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதியான சுண்ணாம்புக் கல் சுரங்க குழிகளை சமன்படுத்தி மரங்களை வளர்க்க வேண்டும். ஊரக வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அரசு சிமென்ட்டை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு அக்கட்சியின் நகரத் தலைவர் மா.மு.சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சங்கர் பங்கேற்று மேற்கண்ட தீர்மானங்களை வலியுறுத்தி பேசினார். மாவட்டத் துணைத் தலைவர் எஸ் .பழனிச்சாமி , வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகரச் செயலர் ஏ.ஆர்.செந்தில் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News