உள்ளூர் செய்திகள்

மாநில கபடி போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

Published On 2022-12-17 15:14 IST   |   Update On 2022-12-17 15:14:00 IST
  • மாநில கபடி போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
  • கலெக்டரை சந்தித்து பாராட்டு பெற்றனர்

அரியலூர்:

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் நடந்தது. இதில் அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர். பின்னர் அந்த அணி வீராங்கனைகள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதியை சந்தித்து பாராட்டு பெற்றனர். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News